‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎

 

 

 

 

 

 

‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

‏‏‎ ‎

ليس كمثله شيء
அவனைப் போன்று எதுவும் கிடையாது

verse (شيء) is considered as most significant Quranic verse which is considered as the root of monotheism.

ஏகத்துவத்தின் ஆணிவேராக கருதக்கூடிய குர்ஆன் வசனத்தில் மிக முக்கியமான வாக்கியம்தான் இந்த (ليس كمثله شيء) என்ற இந்த அழகிய வாக்கியம். அரபியில் மிஸ்லியத் என்றால் மூன்று நிலைகளைக் குறிக்கும். அதாவது (ذات صفت اسماء) இறைத்தன்மை, இறைப்பண்புகள் மற்றும் அழகிய பெயர்கள் என்ற மூன்றாகும்.

அல்லாஹ்வுக்கு இறைத்தன்மையிலும் சரி அவன் பண்புகளிலும் சரி அவனின் அழகிய பெயர்களிலும் சரி அவனுக்கு நிகர் ஏதும் கிடையாது. அதைத்தான் அவனைப் போன்று எதுவும் கிடையாது என்ற இந்த அழகிய வாக்கியம் கூறுகிறது.

இறைத்தன்மை என்று பார்க்கும் பொழுது அவனை நாம் எந்த தன்மையோடும் ஒப்பிட முடியாது. அதேபோல் அவனின் பண்புகளையும் நாம் யாரோடும் ஒப்பிட முடியாது. ஒரு மனிதனின் பண்புகள் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக இன்று கொடுக்கும் மனநிலையில் உள்ளவன் நாளை கஞ்சனாக மாறுவான். அதேபோல் இன்று இறக்குமள்ளவனாக இருப்பவன் நாளை மிகவும் கோபமானவனாக மாறுவான் ஆனால் அல்லாஹ்வின் பண்புகளோ மாறாமல் நிலையாக இருக்கும்.

மேலும் பெயரில் கூட அவனை எதனோடும் ஒப்பிட முடியாது. அழகிய பெயர்கள் எவையெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்துக்கும் அவனே சொந்தக்காரன். இறைவன் தன்னைப்பற்றி திருமறையில் அவன் ஒருவன் அவன் தனித்தவன் அவன் ஒளியால் ஆனவன் அவன் யாரையும் பெறவும் இல்லை அவன் எவரால் பெறப்படும் இல்லை என்று கூறும் இறைவன் இந்த வசனத்தின் மூலம் ஓரிறை கொள்கையை நிலை நாட்டுகிறான். இந்த வசனத்தில் இறைவன் இறை மறுப்பாளர்களுக்கு பல அத்தாட்சிகளை வைத்திருக்கிறான் அதாவது இறை மறுப்பாளர்கள் இந்த வசனத்தை ஆராய்ந்தாலே போதும் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் முறையாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்.

رحمة للعالمين
உம்மை இந்த உலகத்திற்கு அருட்கொடையாகவே
அன்றி வேறு எதற்கும் நாம் அனுப்பப்படவில்லை

அல்லாஹ் தஆலா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரஹமத் ஆகவே இந்த உலகத்திற்கு அனுப்பியுள்ளான். நம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்திற்கு மட்டுமல்ல இதுபோல் எத்தனை உலகங்கள் இருக்கிறதோ அவற்றுக்கும் அவர்கள் ரஹமத் ஆகவே இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

‏‏‎ ‎

அல்லாஹு தஆலா நம் கண்மணி நாயகத்தை குர்ஆனில் பலவகையில் பேருபகாரம் செய்திருக்கிறான், அதிலே உச்ச புகழ்ச்சியாக நம் கண்மணி நாயகத்தை ரஹமத் என்று குறிப்பிடுகிறான். ரஹ்மத் என்றால அருள் மற்றும் பேறருள் என்று அர்த்தமாகும்.

குர்ஆனில் உள்ள ரஹ்மத் என்ற வார்த்தைகள் அனைத்தும் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தான் குறிக்கும். அதனால்தான் குர்ஆனில் ரஹமத் என்ற வார்த்தை ஒருமையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது பன்மையில் எங்கும் சொல்லப்படவில்லை. குர்ஆன் எப்படி அனைத்து மக்களுக்குமான நேர்வழி மற்றும் வாழ்க்கை வழிமுறையோ அதேபோல் ரஹ்மத் ஆகிய ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனைத்து மக்களுக்கான ரஹமத் ஆக அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.

இறைநம்பிக்கை உடையவர்களுக்கு ரஹ்மத்தாக இருக்கிறார்கள் சரி இறை மறுப்பாளர்களுக்கும் ரஹ்மத்தாக இருக்கிறார்கள் என்பதை எப்படி நாம் புரிந்து கொள்ளலாம் என்றால். நாளை மறுமையில் இறை மறுப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வின் விசாரனைக்காக சுமார் 40,000 ஆண்டுகள் காத்துக் கொண்டே இருப்பார்களாம், அந்த நேரத்தில் இறைமறுப்பாளர்கள் அனைவரும் நம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மன்றாடி யா ரசூலல்லாஹ் இன்றே விசாரணை முடிந்து நாங்கள் அனைவரும் நரகவாசிகள் என்று தீர்ப்பானால் கூட நாங்கள் அனைவரும் அங்கு செல்ல தயாரான மனநிலையில் இருக்கிறோம் ஆனால் இப்படி விசாரனைக்காக காத்து கொண்டு இருக்கமுடியவில்லை யா ரசூலல்லாஹ் ஆகையால் விசாரனையை துவங்க தாங்கள் ஷபாஅத் செய்யுங்கள் என்று கூறுவார்களாம்.

‏‏‎ ‎

பிறகு நம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷபாஅத் செய்த பிறகுதான் விசாரணையே துவங்குமாம். இந்த வகையில் பார்க்கும் பொழுது ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து மக்களுக்குமான ரஹ்மத்தாக அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

رضي الله عنهم ورضوا عنه
ALLAH HARMONIZE WITH THEM
THEY ALSO HARMONIZE WITH ALLAH

இந்த உலகத்தில் ஒருவர் எதை வேண்டுமானாலும் பெறலாம் ஆனால் நாம் பெற்று ஒன்றை நம் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து தன்னுடன் வைத்திருப்பது தான் கடினமான ஒன்றாகும். உதாரணமாக பணம், பொருள் மற்றும் நற்பெயர் போன்றவைகளை நாம் எளிதில் சம்பாதித்து கொள்ள முடியும், ஆனால் கடைசி வரை அவற்றை பாதுகாத்து வைத்திருப்பது தான் கடினமான ஒன்றாகும்.

இதேபோல் நாம் இறை அச்சத்தை பொறவோ அல்லாஹ்வின் நல்லடியார்களாக ஆகவோ முடியும். ஆனால் கடைசி வரை அந்த தன்மையை நம்முடன் வைத்திருப்பது தான் கடினமான ஒன்றாகும். ஆகையால் தான் அல்லாஹ் நம்மை நீங்கள் உண்மையானவர்களுடனே இருங்கள் எனக் கூறுகிறான். இதன் மூலம் நாம் கற்க்கும் பாடம் என்னவெனில் நாம் உண்மையானவர்களுடன் இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் நம்மையும் நம் இறையச்சத்தையும் நம் நற்காரியங்களையும் நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அல்லாஹ் நம்மை நீங்கள் உண்மையானவர்களாக ஆகுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் உண்மையானவர்கள் உடனே இருங்கள் என்று கூறுகிறான். அதாவது கண்மனி நாயகத்திற்க்கு சாதிகுல் வஃதில் அமீன் என்ற அழகிய பெயரும் கண்மனி நாயகத்திற்க்காக தன்னையு தன் வாழ்நாளையும் தம் குடும்பத்தாரையும் அர்பனித்த அபூபக்கர் நாயகத்திற்க்கு சித்தீகுல் அக்பர் என்ற அழகிய பெயரையும் அல்லாஹ் பேருபகாரம் செய்திருக்கிறான். இந்த இரண்டிலும் சாதிக் என்ற உண்மை தன்மை இருப்பதினால் அதை நீங்களும் தேடிக்கொள்ளுங்கள் மற்றும் அவர்களுடனே இருங்கள் என்று இந்த வசனத்தின் மூலம் அழகிய முறையில் நமக்கு அல்லாஹ் சொல்லி தருகிறான். பிறகு நம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷபாஅத் செய்த பிறகுதான் விசாரணையே துவங்குமாம். இந்த வகையில் பார்க்கும் பொழுது ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து மக்களுக்குமான ரஹ்மத்தாக அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

كونوا مع الصادقين
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள்

அடியார்களில் இரண்டு வகைதான் உள்ளது. ஒன்று சஹாபியத் (கண்மணி நாயகத்தின் தோழர்கள்) மற்றொன்று அல்லாஹ்வின் நல்லடியார்கள். மேலே உள்ள இரண்டு அடியார்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் நம்மைப் போன்றவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களாகவோ அல்லது இறைநேசர்களாவோ முடியும், ஆனால் ஒருபோதும் கியாம நாள் வரை சஹாபியே ரஸூல் ஆக முடியாது.

நம்மைப் போன்றவர்கள் நல்லடியார்களா அல்லது இறைநேசர்களா இல்லை நாம் சொர்க்கம் புகுவோமா அல்லது நரகம் புகுவோமா என்பதை இறுதித் தீர்ப்பு நாளில் தான் தெரியும், ஆனால் சஹாபியத்தே ரஸூலுக்கு அப்படி எதுவும் கிடையாது. ஏனென்றால் அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள் என்ற இந்த ஒரு நிலைதான் காரணமாகும்.

In the same way we can tolerate the fear of ALLAAH or become good Devotees of ALLAAH. But it is difficult to sustain that character with us until the very end. That is why ALLAAH tells us to be with the truthful ones . The lesson we can learn from this is that we can protect ourselves and our piety and our good deeds only if we are with the true ones.

ஏன் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று நாம் இங்கு கவனிக்கும் பொழுது அவர்கள் அனைவருமே ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பொருந்திக்கொண்டார்கள், நம் கண்மனி நாயகமும் அவர்களை பொருந்தி கொண்டார்கள். ஆகையினால் அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்.

previous arrow
next arrow
Slider

உலுல் அஸ்மை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

வலுவான அடித்தளம்

பல்வேறு இஸ்லாமிய அறிவியல்களைப் பற்றிய வலுவான புரிதல்

எங்கும் கற்றுக்கொள்ளுங்கள்

உலகில் எங்கு வேண்டுமானாலும் மார்கக்கல்வி பயில நேரத்தடையின்றி உதவுகிறது

இஸ்லாமிய நெறிமுறைகள்

இஸ்லாமிய நெறிமுறைகள் பற்றிய புரிதல்

சான்றிதழ் படிப்புகள்

foundation_logo1
குர்ஆன்
1-02
ஹதீஸ்
1-01
பிக்ஹ்
1-04
இஸ்லாமிய சட்டம்
1-05
இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் வங்கிகட்டமைப்பு
1-03
இஸ்லாமிய அரசியல் அறிவியல்

நாங்கள் உதவ முடியுமா?

"உங்கள் கல்வி தேவைகளைப் பற்றி மேலும் அறிய எங்கள் குழு மகிழ்ச்சியடைகிறது.

எங்களை அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்.”

Tamil