• மதராசா (அரபுக்கல்லூரி) மாணவர்கள் ஆலிம் (மவுலவி) பாடத்தின் 7 ஆம் ஆண்டு படிப்பவர்கள்.
• பாசில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
• தனது ஆலிம் படிப்பை 5 ஆண்டுகளில் முடித்து, இப்போது அவர் பாசில் வகுப்பில் படிக்கிறார் என்றால் அவர் பங்கேற்கலாம்.
• கட்டுரையை கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் UAIESI யால் பெறப்படவேண்டும்
• கட்டுரையில் 630 சொற்கள்/வார்த்தைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்
• 630 க்கும் மேற்பட்ட சொற்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை
• நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அவரது சஹாபா ”பெயர்களை பல முறை பயன்படுத்தலாம்
• ஆனால் மீதமுள்ள பொதுவான சொற்களை 5 முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது
• குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களையும், அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தின் ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கருத்துக்கள்/கவிதைகள்/ஆதாரங்கள் போன்றவற்றை நீங்கள் மேற்கோள் காட்டலாம், மேற்கோள் காட்டும் பட்சத்தில் அந்த புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும்
• உங்கள் கட்டுரையை வேறு எந்த கட்டுரையிலிருந்தும் நகலெடுக்கக்கூடாது.